சைக்கிள் ஒடஞ்சிடுச்சி

    பகல் முழுவதும் கோபத்தை கக்கிய சூரியன், சாந்தமடையும் மாலை வேளையில் பல சரக்கு வாங்க சந்தைக்கு சென்ற தந்தையை எதிர்பார்த்து வாசற் படியில் ஷாம் காத்துக் கொண்டிருந்தான். கன நேரமாகியும் தந்தையின் தரிசனம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தான். சைக்கிள் இருந்தாலாவது, அதை ஓட்டி விளையாடலாம், சைக்கிளும் இல்ல என்ன செய்யுறதுஎன்று தனக்குத்தானே முணங்கிக் கொண்டிருக்கும் வேளையில், சின்னம்மா பாட்டியின் காலாடிச் சத்தம் கேட்டது. பாட்டி என்று பாய்ந்து சென்ற ஷாம், அவர்கள் பக்க வாட்டியில் இருந்த பையை வாங்கிக் கொண்டு பாட்டியின் நலம் விசாரித்தபடி நடந்தான். மலையேற்றத்தில் சோர்வடைந்த பாட்டியின் குரலும் காலும் தள்ளாடியது, தளர்வடைந்தது.

    ஒரு வழியாக பையையும், பாட்டியையும் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தான் ஷாம். பாட்டியை பாதி இடிந்த திண்ணையில் அமர வைத்துவிட்டு ஷாம் வீட்டிற்குள் சென்றான். நொடி பொழுது தாமதிக்காமல், குவளைத் தண்ணீரை கொண்டு வந்து பாட்டியிடம் நீட்டினான். குவளைத் தண்ணீரை, குபுக்கு, குபுக்கு என குடித்து முடித்த பாட்டி சுய நினைவுக்கு வந்தார்கள். பார்த்த நொடியில் தொடங்கும் பாடலை பத்து நிமிடம் கழித்து ஆரம்பித்தார்கள்.

    பாட்டியை ஷாம் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். பாட்டி தான் வாங்கி வந்த மல்லிப் பூவை, தன்னுடைய மகளின் புகைப்படத்தில் மாட்டி விட்டு, பழைய பூவை சன்னல் வழியாக வெளியே எறிந்தார்கள். ஷாம் பாட்டிக் கொண்டு வந்தப் பையை ஆராய்ந்து, உள்ளே இருந்த முறுக்கை கீழே சிந்தியபடி சாப்பிட்டான். ஷாமின் சைகையை பார்த்தப் பாட்டி, " அடுத்த வருசம், பள்ளிக்கூடம் போறவன் இப்படித்தான் சாப்பிடுவானா?" என பொய்க்  கோபத்தோடு அதட்டினார். ஆனால், ஷாமின் காதில் எதுவும் விழவில்லை. அவன் முறுக்கை வாயில் போட்டு நொறுக்குவதில் முழு கவனத்தையும் செலுத்தினான். அப்பாவையும், மகனையும் திட்டிக் கொண்டே, ஆங்காங்கே சிதறிக் கிடந்த துணிகளையும், பாத்திரங்களையும் ஒழுங்குப்படுத்த தொடங்கினார் சின்னம்மா பாட்டி. பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தப் பாட்டி, “ எங்கடா உங்க அப்பா?என்று கேட்டார். சுட்டி ஷாம், .” ஏன் உனக்கு மாப்பிள்ளை இல்லையா?என குத்தலாக மறுகேள்வி கேட்டான். பச்சப்புள்ள மாறிய பேசுது, எல்லாம் அவன் வளர்ப்பப்படி . அன்னிக்கு என்  பொண்ண ஏமாத்தி இழத்துக்குட்டு ஓடி, என் புருஷன் கையாலே என் பொண்ண கொல் வைச்சான். இப்ப ஏன் பேரனுக்கு தப்பு, தப்பா சொல்லிக் கொடுக்கிறான்.என்று பாட்டி முனவிக் கொண்டிருந்தார். ஷாம் எதையும் கவனக்கிகாமல் முறுக்கை நொறுக்கிக் கொண்டிருந்தான். பாத்திரமும், முறுக்கும் கூச்சல் போட்டது, இருவரும் அமைதியாளர்கள்.

    மலைச்சரிவில் விழுந்து எழுந்து ஓடி வந்த வேதா, அம்மா...அம்மா...என்று கத்திக் கொண்டே சின்னம்மாவை நோக்கி ஓடி வந்தான். “ஏருப்பா நீஎன்று வியப்புடன் கேட்டார் பாட்டி. “மாமா, அப்ப எங்க “, என இராகத்துடன் ஷாம் கேட்டான். ஷாமை தனியே விடுத்து, பாட்டியின் காதில் ஏதோ முனவினான் வேதா. பாட்டியின் கருவிழிகள் கண்ணிக் குளமாகியது. முடிஞ்சிடுச்சுஎன்ற வார்த்தை மட்டும் ஷாம் காதில் விழுந்தது. நீ போய் ஆகா வேண்டிய காரியத்தை பார்ப்பா, நான் ஷாமை பின்னாலே கூட்டிட்டு வரேன்" என்று சொல்லி அனுப்பி வைத்தார். முருக்கை நொறுக்கிக் கொண்டே பாட்டி " என்ன முடிஞ்சிடுச்சு?" என்று ஷாம் கேட்டான். முடிஞ்சிடுச்சில்லப்பா, ஒடஞ்சிடுச்சு. சைக்கிள் ஒடஞ்சிடுச்சு". சைக்கிளை இழந்தது பேரனுக்கும், மறுமகனை இழந்தது பாட்டிக்கும் கண்ணீரை தந்தது. கோபத்துடன் மலையேறிய பாட்டி, கையில் ஷாமுடன் கண்ணில் நீருடனும் மலை இறங்கினார்கள்.

 

Post a Comment

0 Comments