புத்தக விவரங்கள்
புத்தகம் : தாயைப்போல
ஆசிரியர்: ‘முகம்’ மாமணி
பதிப்பகம் : பல்லவி பதிப்பகம்
வருடம் : 2013
கதைச் சுருக்கம்
ஆழகிரி என்ற
செல்வர் ஒருவர் இருகின்றார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்
உள்ளனர். அவருடைய மனைவி விளம்பர பித்து பிடித்தவர் இதனால் அழகிரி தன்னுடைய
உடைமைகள் அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்து விடுகின்றார. அச்சமயத்தில் அவரது
நிறுவனத்தில் பணிபுரியும் காமு (காமாட்சி) என்ற பெண் அவருக்கு மிகவும்
உதவுகி;ன்றார்கள். ஏனெனில், தன்னுடைய மானத்தை காப்பாற்ற அருணகிரியைப் பகைத்துக்
கொண்டதால் தான் இவருக்கு இந்நிலை என்று அவள் எண்ணிணாள். இருப்பினும் யார்
உதவியையும் ஏற்க மறுத்து ஒரு சாமியாரைப் போல அலைகின்றார் அழகிரி. அவருக்கு புது
வழி ஒன்று கிடைக்கின்றது. அவ்வழியில் பயணித்து, காமாட்சியின் உதவியுடன் அனைத்து
கடன்களையும் அடைத்து தன் மேல் படிந்த கரையைப் போக்குகி;ன்றார் அழகிரி.
இதற்கிடையில் அழகிரியின் மனைவி வாணி மேயர்
தேர்தலில் தோற்று அனைத்தையும் இழக்கின்றார். பின் சட்டமன்ற தேர்தலில்
வெற்றிபெற்று அமைச்சர் ஆகின்றார். இச்சமயத்தில் குழந்தைகளை அவள் கவனித்து கொள்ள
தவறுவதால் மதி இறந்து விடுகிறாள். பின்பு அமைச்சர் பதவியையும் இழந்து தனிமையில்
வாடுகின்றார் வாணி. காமு அவளுடைய மகன் ரவியையும் மேலும் வாணிக்கு சிறையில்
பிறந்த பெண் குழந்தையையும் பார்த்து கொள்ளவதோடு ஒரு குழந்தைகள் இல்லத்தையும்
அழகிரியின் ஆசைக்கு இணங்கி நடத்துகின்றார்கள், பின்பு தொழுநோயளிகளின் மாதாவாக
மாறுகின்றார்கள். அதே நேரத்தில் அழகிரி ஒரு பெரிய சாதுவாக உருவெடுக்கின்றார்.
அழகிரி சாதுவாக வளர்ந்த ஊரில் சாதிப் பிரச்சனை வருகின்றது,
அந்தப்புள்ளியிலிருந்து சமத்துவம் பேசிக்கொண்டு வரும் சவுந்தர பாண்டியன் என்ற
இளைஞன் கமியுளிஸ கோட்பாடுகளை பிரதிபலிக்கின்றார். இறுதியில் அழகிரி
புற்றுநோயின் தாக்கத்தால் இறக்கின்றார். பாண்டியன் ஒரு கொலை மற்றும் திருட்டு
வழக்கில் சம்மந்தப் பட்டிருப்பதாக கைது செய்யப்படுகின்றார். அத்துடன் கதை
முடிவுக்கு வருகின்றது.
மையக்கருத்து
நம்முடைய
சமுகத்தில் மலிந்து கிடக்கும் சமுக அவலங்களை படம் பிடித்து காட்டுவதாக கதை
அமைக்கப்பட்டிருக்கிறது. தனி மனித ஒழக்கம், குடும்பத்தின் அமைப்பு,
சமதாயத்தின்(அரசியல்) போக்கு மற்றும் சம தர்மத்தின் மீட்பு ஆகியவற்றை
அடிப்படையாக கொண்டதுதான் தாயைப்போல.
கதாபாத்திரங்களின் படைப்பு
பல்வேறு
மாறுபட்ட கதாபாத்திரங்களை தொட்டுகொண்டு வறையப்பட்ட ஒரு புதினம்தான் தாயைப்போல.
புதினம் முழுமைக்கும் ஓரிரு காதபாத்திரங்களே பயணித்தாலும் சின்ன கதை
மாந்தர்களின் பாத்திர படைப்பு கூட மிகவும் கவனமாக கையளப்பட்டிருக்கிறது.
புதினத்தை வாசித்து முடித்த பின் கதைமாந்தர்களின் பட்டியலை எடுத்தால் பட்டியல்
நீண்டு கொண்டே செல்வதுதான் அதற்கு சான்று. அழகிரி என்ற முதன்மை
கதாபாத்திரத்தைக் கொண்டு ஏனைய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்துகின்றன. ஆனால்,
இந்த அறிமுகப் படலம் கதையோடு இயைந்து வருவதால், இப்படலம் மிகவும் இயற்கையாக
இருக்கின்றது. மற்றொரு புறம் இந்த கதைக்கு இத்தனை கதைமாந்தர்கள் அவசியம்தானா
எனவும் யோசிக்க தூண்டுகிறது. பாத்திரங்களின் உருவகத்திற்கு அளிக்கப்பட்ட
முக்கியத்தும் அவற்றின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படவில்லை, சில கதாபாத்திரங்கள்
பாதில் கைவிடப்பட்டன(வாணி, பொன்னுரங்கம், ரவி) என்று தான் கூற
வேண்டும்.
கதையின் போக்கு
ஒரு
புள்ளியில் தொடங்கி தன்னால் இயன்ற தூரம் வரை கதையை ஆசிரியர் இழத்து
சென்றிருக்கிறார். கதையில் கடந்து செல்லும் பொழது எண்ணற்ற சி;ந்தனை அதிர்வளைகளை
இக்கதை உண்டாக்குகிறது. கதை பின்னல் முறையில் பல தலைப்புகளின் கீழ்
எழதப்பட்டிருந்தாலும் கதை தெளிவாக புரிகின்றது. பல்வேறு சாரங்களை கதை
பெற்றிருப்பினும் இதுதான் கதையின் மையம் அல்லது இதுதான் கதையின் சுருக்கம்
என்று தெளிவாக கூறுவதற்கு சற்று கடினமாக இருக்கின்றது. சில இடங்களில் பல்வேறு
பட்ட வாசகர்களை ஈர்ப்பதற்காக கருத்து தினிப்பு செய்யப்பட்டிருப்பது சலிப்பை
உண்டாக்கிறது. கதையின் ஆசிரியர் கதைச்சொல்லியாக வந்து கதையைச் சொல்லும்
பாணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
என் கருத்து
மொத்தத்தில்
நல்ல தொடக்கத்தைக் கொண்ட இக்கதைக்கு ஏற்ற கதை கட்டமைப்பும் உறுதியான முடிவும்
இல்லாதது கதையின் கருத்துகளை காண்பதற்கு தடையாக வரும் கருப்பு கண்ணாடி போல்
இருக்கின்றது. கதையில் இடம்பெறும் அதித கருத்துகள் குறைக்கப் பட்டிருக்க
வேண்டும். இத்தனை குறைகள் இருப்பினும் கதையும் அதன் மூலம் ஆசிரியர் கூறும்
கருப்பொருளும் தெளிவாக புரிகின்றது இவ்வகையில் இது ஒரு சிறந்த புதினம்
0 Comments
Don't leave me empty