ஜாலி ஜாலி

                                             
   மலக்குழிக்குள் முத்து குளிக்கும் என் பெயர் முத்துக்குமார். எனக்கு முன்னவர் முதலாளியாரின் மூதாட்டிக்கு முதலுதவி செய்யும் வீட்டு செவிலியர். அவருடைய தம்பி ஆகிய நான் ஊரை உருக்குலைக்க காத்திருக்கும் கிருமிகளின் கீரியை முடிக்கும் கீர்த்தியை கொண்டவன்
. என் அண்ணன் ஒரு உருப்படாத பொறுப்பில்லாத வேலையை செய்கிறார். நானோ ஊர் செழிக்க உலகம் மனக்க உருக்குலையும் உயர்வானவன் என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லி மந்தப்பட்ட என் உள்ளத்தை மாற்றிக் கொள்வேன். மாடர்ன் வேர்ல்டு என மார்தட்டிக்கொள்ளும் இக்காலத்திலும் மலகூட்டை கலைப்பதற்கு மனிதன் தான் மார்க்கம். நான் ஒரு கிறுக்கன் இப்படித்தான் எப்பொழுதும் உளறுவேன் இப்பொழுது கதைக்கு வருகிறேன்.

    மண்ணைத் தின்று அதை மக்க வைக்கும் மண்புழுவின் அசைவுகளை என் கண்கள் எப்பொழுதும் காணத் தவறியதில்லை அப்படி பார்த்துக் கொண்டு இருக்கையில் என் செவிகளுக்கு காலை உணவு தயாராகிக் கொண்டிருந்ததுமடையன் என்று  என்று அண்ணி ஆரம்பிக்க மக்கு என்று அண்ணனின் மோனையின் மோகன இராகங்களுக்கிடையில் மௌனமாய் மிளகாய் கடித்தது போல் அவதி அவதியாய் தின்று முடித்தேன்அன்று அடித்த மழையின் சீற்றத்தால் பல குழாய்கள் குடைய ஆள் வேண்டி எனக்கு அழைப்பு மேல் அழைப்பு சட்டை அணிந்து அவசர ஊதியை போல் விரைந்து சென்றேன்அடைப்பை ஆராய்ந்து அறிவதில் ஆய்வாளர்களும் என்னிடம் தோற்றுப் போவார்கள்என் தொழில் சுத்தம் ஊரின் சித்தம் போன்ற வசனங்களை வீசிக்கொண்டே வீசப்பட்ட பொருட்களை சாக்கடைக்குழிக்குள் இருந்து வாலியால் எடுத்து என்னைப் போன்ற இன்னொரு வாலிபரிடம் கொடுத்துக் கொண்டிருந்தேன்எத்தனையோ பெண்களைப் பார்த்து ரசித்திருக்கின்றேன் அதன் விளைவாகவோ என்னவோஆழமான காயங்களை கொண்ட என் காலில் அழகி ஒருத்தியின் சேலை சிக்கியதுநான் சேலையை இழுக்க முயற்சித்தேன்ஆனால்நான் சேலையால் இழுக்கப்பட்டேன்சேலையின் அழகைக் காண ஆசையாய் நான் அதை வெளியே இழுக்க முயற்சித்தேன். ஆசை அர்ப்பமாய் போனது என்னை காட்டிலும் சேலை அதிக ஆசை கொண்டதால் என்னை அது உள்ளிழுத்தது இதற்கிடையில் என் நெஞ்சுக்கு வலப்பக்கம் ஒரு அரிப்பு ஏற்பட்டு அந்த அரிப்பை என் கைகள் அணுகுவதற்குள் இதயத்தின் அரிப்பையும் அணுகக் கூடிய அரை அடி பாட்டில் அந்த அரிப்பை நீக்கியது. சுவாசிப்பதற்கு நான் காற்று கேட்டேன்அந்நேரத்தில் இறைவனால் எனக்கு அளிக்க முடிந்தது கார்பன் டை ஆக்சைடையும் அசுத்தம் படிந்த சாக்கடை நீரையும் தான்நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற வார்த்தையின் உண்மை பொருள் அப்பொழுதுதான் புரிந்ததுநீரை நிறைய குடித்த பின் நீண்ட நிலையான நித்திரையில் மூழ்கினேன் இனி அண்ணனாலும் அண்ணியாலும் என்னை திட்ட முடியாது ஜாலி... ஜாலி...

     

Post a Comment

0 Comments